ஆணிவேர்

நீங்கள் பல நன்மைகள் செய்திருக்கலாம்,அல்லதுபல சாதனை புரிந்திருக்கலாம்,இப்பொழுது இருக்கக்கூடிய சூழலை விட்டுசற்று விலகியபடி சிந்தியுங்கள்,நீங்கள் உங்கள் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்மத்தியில் இருக்கும் பொழுதுஇப்பொழுது இருக்கும் நிலைமையைஇதற்கு முன்னாள் இருந்த சூழலை மதிப்பிட்டு பாருங்கள்,பின் அவற்றை எப்போது மறக்காமல் இருத்தல் நன்மையே,ஏனென்றால் பழைய நிலைமையை மறந்தவன்இங்கே அதிகமும் கூடஆளே இல்லாமல் போனதும் கூட ,நன்றி மறப்பது அழிவின் ஆணிவேர்

நன்றி

நான்!என்னுடைய சந்தோஷ நாட்களில்இறைவனை மறப்பதில்லை,அதனால் என்னவோ!எனக்கு ஒன்று புரியவில்லை?இறைவன்எப்போதுமே,,, என்னையும் அவர் எனக்காக கொடுத்துள்ள குடும்பத்தையும்ஒரு துளி நேரம் கூட மறப்பதில்லை , , ,நானும்,,, இறைவனுக்கு நன்றி என்னும் வார்த்தையை சொல்ல மறப்பதில்லை!

காதலர் தினம்

கவிதைகள் பல எழுதலாம்,காலங்கள் பல கடக்கலாம்,போட்டி பொறாமைகள் பல இருக்கலாம்,இழப்புகள் பல பார்த்திருக்கலாம்,தத்துவங்கள் பல பேசலாம்,வித்தைகள் பல செய்திருக்கலாம்,கெடுதல்கள் பல கணக்கிலடங்காமலிருக்கலாம்,நன்மைகள் பல செய்ய நினைத்திருக்கலாம்,சாதனைகள் பல புரிந்திருக்கலாம்,பாதைகள் பல வகுத்திருக்கலாம்,உண்மைகள் பல பேசாதிருக்கலாம்,தோல்விகள் பல கண்டிருக்கலாம்,வெற்றிகள் பல தவறவிட்டிருக்கலாம்,எத்தனையோ காதல் காவியங்கள் பாத்திருக்கலாம்,ஆனால்!உண்மைக்காதலைஒரு சில நல்ல உள்ளங்களிலே தான் உணரலாம்,,,

உனக்கு நல்லதே

தோல்வியை கண்டு கலங்காதே,வெற்றியைக் கொண்டு மயங்காதே,மனம் போன போக்கில் போகாதே ,பேராசை என்னும் பாழுங்கிணற்றில் மூழ்காதே,தாழ்ந்தவனிடத்தில் தற்பெருமை கொள்ளாதே,ஏழையின் பசியை தீர்க்க தயங்காதே,பணக்காரனின் நிழலில் சாயாதே,பாசக்காரர்களை விட்டு விலகாதே,பொல்லாதவர்களை கண்டு அஞ்சாதே,தவறு செய்த பிறகு இறைவனிடம் கெஞ்சாதே,மன்னிக்கவும்,விட்டுக்கொடுக்கவும் யோசிக்காதே,இன்னொருவரை பற்றி மற்றவரிடம் குறைகூறாதே,இவைகள் அனைத்தும் உனக்கு நல்லதே!

மனைவி

மனைவி!என் கால்களில் விழுந்து வணங்கினால்நான் அரசனாகி விட்டேன்.நான் கட்டளையிட்டு காலில் விழ சொன்னேன்அரக்கர்களின் தலைவனாகி விட்டேன்.அவள் என்னிடத்தில் பயத்துடன் நெருங்கினாள்எல்லோராலும் வெறுக்கப்பட்டேன்.நான் கொடுத்த துன்பங்களுக்குஅவளிடம் முழங்காலிட்டு மண்ணிப்பு கேட்டேன்,அகில உலகமும் என் காலில் கிடப்பது போல உணரப்பட்டேன்.நான் பொய்யாய் நேசித்தேன்எனக்குள் போர்க்களம் தாண்டவமாடியது.உண்மையாய் அரவணைத்தேன்என் வாழ்க்கையோ சுபிக்க்ஷம் பெற்றது.என் பேச்சை கேட்கும் படி ஆணையிட்டேன்எல்லாம் நிம்மதியும் போனது.அவள் பேச்சை கேட்க ஆரம்பித்தேன்வாழும்போதே சொர்கத்தை கண்டேன்.நான் என் அனுபவத்தையே ஆசானாக்கினேன்,என்னையும் என் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டேன்.இதுதானடா நல்வாழ்க்கை என புரிந்துகொண்டேன்மனைவியின்Continue reading “மனைவி”

கோபம்

கோபத்தில் நீ எடுக்கும் அனைத்து முடிவுகளுமே அலங்கோலமாகத்தான் அலங்கரிக்கும்,,,அச்சூழ்நிலைகளையும் , சூழ்ந்துள்ளோர்களையும் விட்டு பதமாகவும், பணிவாகவும், அப்படியே சூதகமாகஅங்கிருந்து நாம் விலகிவரும் அளவிற்குஒரு தாரகமந்திரத்தை நீ கையாளக்கற்றுக்கொள்!கண்டிப்பாக அந்த கோபத்திற்கேஉன்னால் நிதானமான ஒரு புன்னகையை பரிசளிக்கக்கூடும்,கற்பனைக்கூட பண்ணமுடியாத அளவிற்கு அதன் பலன் பிரதிப்பலிக்கும்.இவற்றை உனக்கு கூற நானொன்றும் மகான் அல்ல!ஆனால்,இவற்றின் வலிகளையும்,மனவேதனைகளையும்பன்மடங்கு நன்றாக உணர்ந்தவனாக என் எழுத்து வரிகள் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில்இதன் வலி என் மனதையும்என் எண்ணிலடங்கா சந்தோஷங்களையும் சீர்குலைத்திருக்கின்றன.பிறகு நான் ஏன் அதை என்Continue reading “கோபம்”

நான்

நான் நிறைய அவமானங்களையும்அசிங்கங்களை சந்தித்திருக்கிறேன்.அவற்றை சந்திப்பதே ஒரு கொடுமையான தருணங்கள்தான்,அப்படியிருந்த நான்ஏன் இதெல்லாம் எனக்கு நடந்தது,நான் நேர்மையானவன் தானே என புலம்பியதுண்டு.அதன் மறைபொருள் என்னவென்றால்,எனக்கு நேர்மை என்னும்பொய்யான எண்ணத்திலிருந்துஉண்மை என்னும் விடியலை நோக்கிச்செல்லவே,நான் என் வாழ்நாளில்,,, இவன் உண்மையானவன் என்ற திமிர் மட்டும் போதுமென விருப்பம் கொண்டேன். அதுவே என் நடைமுறை நோக்கமாகமாற்றிக்கொண்ட பிறகுதான்,போன மானம் மூன்று மடங்காக திரும்பி வந்தது.ஏன் போகணும் ஏன் வரணும்என ஒரு சிலர் நினைக்கலாம்.ஆனால் காலம் யாரை எப்படி புரட்டிப்போடும்என சொல்லவேContinue reading “நான்”

உன் வாழ்க்கை

நேர் வழியில் சென்றுகவலைகள் இருந்தாலும் நிம்மதியாக இருக்கப்போகிறாயா,,இல்லைகுறுக்கு வழியில் சென்றுநிலைகுலையப்போகிறாயா,,வறுமையில் வாழ்ந்தாலும்குடும்பத்துடன் சிறு புன்னகை காணப்போகிறாயா,இல்லை சொகுசாக வாழஉன் உறவுகளை விட்டுச்செல்ல போகிறாயா,தேவைக்கேற்ப பூர்த்திகள் கிடைத்தால் நன்மையாஇல்லை தேவையில்லாமல் தேவைக்கும் மேலே உன் தேவையை நினைத்துதடம்மாற்றி சீர்குலைய போகிறாயாஉன் வாழ்க்கை உன்னால் மட்டுமே நீடிக்கவும் செய்யும் நிற்கவும் செய்யும்

நினைவில் கொள்

நீங்கள் மிகவும் அதிகப்படியான துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்களா,தாங்க முடியாத அளவிற்கு வேதனை வாட்டுகிறதா,ஆறுதல் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்அனுபவித்தாள் தான் அவர்களுக்கு தெரியும்என்று கோபித்துக்கொள்கிறீர்களாஆம்! நீங்கள் நினைப்பது போலவே இருக்கட்டும்.உங்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லாமலே போகட்டும்சற்று நிதானத்துடன் தனிமையில் சிந்தியுங்கள்உங்களுக்கு நீங்கள் ஆறுதல் சொல்ல முடியுமா என்றுஇது போன்ற சூழலில் நீங்கள் முதலில்உங்கள் உடல் நலத்தையும்உங்கள் மன நிலையையும் ஒரு நிலை படுத்திசீரான வழியில் கொண்டுச்செல்வது அவசியமான ஒன்று.பின் இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லாதவையே தவிரநிரந்தரமானது என்று எதுவுமே உத்திரவாதம்Continue reading “நினைவில் கொள்”

நான் அறிந்த உண்மை

நாம் நம் வாழ்நாளில்எத்தனையோ உழைப்பாளிகளையும்,தொழிலாளிகளையும்,விவசாயிகளையும்,சந்தித்த அந்த முக்கிய தருணங்கள் இருந்திருக்கும்.அந்த பொன்னான நேரங்களில்நாம் அவர்களிடத்தில் எப்போதாவதுஒரு சிறு புன்னகையுடன்அவர்களை நலம் விசாரித்ததுண்டா?ஏன் எதெற்கெல்லாம்தேவையற்ற இடங்களில்பணிவற்ற நபர்களிடத்தில்பழகியது போல,ஏன் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன்,ஒரு ஆறுதலுக்காக கூடநாம் பேசிக்கொள்ள நினைப்பதில்லை.எல்லோரிடமும் அன்பாக சில நிமிடங்கள் பேசிப்பழகினால் என்ன,,,நாம் தாழ்ந்தா போகப்போகிறோம்,உங்கள் அன்றாட வாழ்வில்எவ்வளவோ எளியோர்களை நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்.அவர்களை ஒரு நாளாவதுஆறுதலாய் பேசி இருக்கிறோமா,கண்டிப்பாக இல்லைபிறகு எங்கிருந்து வந்ததுஇந்த உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு,,,எவன் ஒருவன் தனக்கு கீழே உள்ளவனைContinue reading “நான் அறிந்த உண்மை”

Design a site like this with WordPress.com
Get started